இறப்பர் பால் இறக்குமதியால் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்

இறப்பர் பால் இறக்குமதியால் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்

இறப்பர் பால் இறக்குமதியால் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2018 | 4:19 pm

இறப்பர் பால் இறக்குமதி செய்யப்படுவதனால் இறப்பர் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் களுத்துறை மாவட்ட இறப்பர் உற்பத்தியாளர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்திலுள்ள இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மேலும் சில இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயமுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.

இந்த விடயம் தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இறப்பரின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஏ. ரஞ்சித் தெரிவித்தார்.

எனினும், சந்தையில் உள்நாட்டு இறப்பர் கொள்வனவு செய்யப்படவில்லை எனின், அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்