1500 தொழிலாளர்களைக் கொண்டு புதிய ரயில் நிலையத்தை ஒரே இரவில் அமைத்த சீனா

1500 தொழிலாளர்களைக் கொண்டு புதிய ரயில் நிலையத்தை ஒரே இரவில் அமைத்த சீனா

1500 தொழிலாளர்களைக் கொண்டு புதிய ரயில் நிலையத்தை ஒரே இரவில் அமைத்த சீனா

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2018 | 6:29 pm

சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள முக்கிய ரயில் தடத்தில் 1500 தொழிலாளர்களைக் கொண்டு ஒரே இரவில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தெளிவான திட்டம், அசாத்திய வேகம் ஆகியவற்றால் சீனா எந்த சவால்களையும் முறியடித்து விடுகிறது.

அவர்களின் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ திட்டங்களைக் கூறலாம். அந்த வகையில், சமீபத்தில் ஒரே இரவில் ஒரு ரயில் நிலையத்தையே முழுவதுமாகக் கட்டமைத்துள்ளது சீனா.

ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள லோங்யான் நகரில் தான் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடத்தில் புதிதாக ரயில் நிலையம் அமைக்கத் தேவைப்பட்டதால், கடந்த 19 ஆம் திகதி இரவில் பணிகள் தொடங்கப்பட்டு மறுநாள் காலை முடிக்கப்பட்டுள்ளன. 9 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பணிகள் முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1500 தொழிலாளர்கள் 7 குழுக்களாகப் பிரிந்து தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை சிறப்பாகச் செய்துள்ளதாக சீனா டைஸிஜு கட்டுமான நிறுவனத்தின் துணை மேலாளர் ஷான் தாவ்சாங் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்