விசுவமடுவில் 138 குடும்பங்களுக்கான வாக்காளர் அட்டைகள் ஐ.தே.க ஆதரவாளரின் வீட்டிலிருந்து பறிமுதல்

விசுவமடுவில் 138 குடும்பங்களுக்கான வாக்காளர் அட்டைகள் ஐ.தே.க ஆதரவாளரின் வீட்டிலிருந்து பறிமுதல்

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2018 | 4:11 pm

முல்லைத்தீவு – விசுவமடு, தேராவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து 288 வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

138 குடும்பங்களுக்கான வாக்காளர் அட்டைகளே குறித்த வீட்டிலிருந்து பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டிலிருந்தே இவை பெறப்பட்டுள்ளன.

குறித்த பகுதிக்கு பொறுப்பான தபால் விநியோகஸ்தர் ஊடாக அவை வழங்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரும், தபால் விநியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்