முறிகள் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை ஊழல்மிகு அரசியல்வாதிகள் பிற்போட்டுள்ளனர்:  ஜனாதிபதி 

முறிகள் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை ஊழல்மிகு அரசியல்வாதிகள் பிற்போட்டுள்ளனர்:  ஜனாதிபதி 

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2018 | 6:14 pm

முறிகள் விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தை ஊழல்மிகு அரசியல்வாதிகள் தேர்தலின் பின்னர் நடத்துவதற்காக பிற்போட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாணந்துறையில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இயலுமாக இருந்தால் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னர் அறிக்கை மீதான விவாதத்தை நடத்துமாறு ஜனாதிபதி இதன்போது சவால் விடுத்தார்.

அவ்வாறு தேர்தலுக்கு முன்னர் முறிகள் விவகாரம் தொடர்பான அறிக்கை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படுமாயின், பலரது அடையாளம் இல்லாது போகும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்