முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி

முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி

முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2018 | 8:16 pm

முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை இலங்கை அணி உறுதிப்படுத்திக்கொண்டுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்களையும் இழந்தது.

கடைசி 4 விக்கெட்களும் 4 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட, பங்களாதேஷ் அணி 24 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியில் முஷ்பிகுர் ரஹீம் பெற்ற 26 ஓட்டங்களே அணி சார்பில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டமாகப் பதிவானது.

பந்துவீச்சில் சுரங்க லக்மால் 3 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர, திசர பெரேரா, லக்சான் சந்தகேன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு உபுல் தரங்க மற்றும் தனுஷ்க குணதிலக்க ஜோடி அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது.

உபுல் தரங்க 39 ஓட்டங்களையும் தனுஷ்க குணதிலக்க 35 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர் .

இலங்கை அணி 11.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்