ஏ.எல்.எம். நஸீர் விரைவில் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பார்: அப்துல் மஜீத்

ஏ.எல்.எம். நஸீர் விரைவில் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பார்: அப்துல் மஜீத்

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2018 | 10:08 pm

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், கட்சியின் அடுத்த பேராளர் மாநாட்டில் நியமிக்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அத்துடன், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் விரைவில் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியையும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் பதவியையும் சபீக் ரஜாப்தீன் நேற்று (24) இராஜினாமா செய்தார்.

அதன் பின்னர் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலின் மூலம் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.எச்.எம். சல்மான் அண்மையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

சுழற்சி முறையிலான தேசியப் பட்டியலுக்கு அமைய, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் விரைவில் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பார் என எதிர்பார்ப்பதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்