2018 உலகக்கிண்ண கால்பந்தாட்ட வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது

2018 உலகக்கிண்ண கால்பந்தாட்ட வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது

2018 உலகக்கிண்ண கால்பந்தாட்ட வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2018 | 3:38 pm

2018 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் சாம்பியனாகும் அணிக்கு பரிசளிக்கப்படவுள்ள வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு நேற்று (23) இரவு கொண்டுவரப்பட்டது.

உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் வெற்றிக்கிண்ணமொன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

21 ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடர் ரஷ்யாவில் ஜூன் மாதம் 14 ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

கால்பந்தாட்டத்தொடரில் சாம்பியனாகும் அணிக்கு பரிசளிக்கப்படும் வெற்றிக்கிண்ணத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச்செல்லும் பயணம் கடந்த மாதம் 22 ஆம் ஆரம்பிக்கப்பட்டது.

06 கண்டங்களூடாக 52 நாடுகளுக்கு இந்த வெற்றிக்கிண்ணம் எடுத்துச்செல்லப்படுகின்றது.

இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவுகளுக்கும் கிண்ணம் கொண்டுசெல்லப்படவுள்ளது.

நேற்றைய தினம் வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதோடு , இந்த பயணத்தின் முதல் நாடாக இலங்கை திகழ்கின்றமை சிறப்பம்சமாகும்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் வெற்றிக்கிண்ணம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்