ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் இராஜினாமா

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2018 | 4:32 pm

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியையும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் பதவியையும் இராஜினாமா செய்வதாக சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.

தனது இராஜினாமாக் கடிதத்தை கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கையளித்ததாக அவர் நியூஸ்பெஸ்ட்டுக்குக் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று முற்பகல் இராஜினாமா கடிதத்தை கையளித்ததாகவும் சபீக் ரஜாப்தீன் கூறினார்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த பொறுப்புகளிலிருந்து இராஜினாமா செய்வதாகவும் சபீக் ரஜாப்தீன் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்