லிபியாவில் நடத்தப்பட்ட இரட்டை கார்க்குண்டு தாக்குதலில் சுமார் 27 பேர் பலி

லிபியாவில் நடத்தப்பட்ட இரட்டை கார்க்குண்டு தாக்குதலில் சுமார் 27 பேர் பலி

லிபியாவில் நடத்தப்பட்ட இரட்டை கார்க்குண்டு தாக்குதலில் சுமார் 27 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2018 | 4:58 pm

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் நடத்தப்பட்ட இரட்டை கார்க்குண்டு தாக்குதலில் சுமார் 27 பேர் பலியாகியுள்ளனர்.

லிபியாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான பெங்காஸியில் பிரபலமான மசூதி ஒன்றில் கார்க்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மசூதி முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு முதலில் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

அரை மணி நேரம் கழித்து மீண்டும் அதே இடத்தில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து நடந்த இரட்டை வெடி குண்டு தாக்குதல்களில் 27 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அரச அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த கொடூரத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்