ரவி கருணாநாயக்கவின் சிறுப்புரிமை கேள்விக்கு சபாநாயகர் வரையறை

ரவி கருணாநாயக்கவின் சிறுப்புரிமை கேள்விக்கு சபாநாயகர் வரையறை

ரவி கருணாநாயக்கவின் சிறுப்புரிமை கேள்விக்கு சபாநாயகர் வரையறை

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2018 | 8:39 pm

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் சிறப்புரிமை தொடர்பான பிரச்சினையை இன்றைய தினம் முன்வைக்க முடியாது என சபாநாயகர் இன்று அறிவித்தார்.

அத்துடன், அது பாராளுமன்ற சிறப்புரிமையுடன் தொடர்புடைய விடயம் அல்லவெனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தமக்கு கருத்துத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லையாயின், சபையிலிருந்து வௌியேறி ஊடகவியலாளர்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினரின் இந்தக் கருத்தையடுத்து, அவரின் ஊடகப்பிரிவின் அதிகாரியொருவர் ஊடகவியலாளர்களுக்கான அறைக்கு வந்ததாகவும்
ரவி கருணாநாயக்க சபையில் ஆற்றவிருந்த உரை அடங்கிய ஆவணத்தை அங்கிருந்த ஊடகவியலாளர்களுக்கு அவர் வழங்கியதாகவும் நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

தமது கருத்து ஊடாக எவரையும் தாக்கும் நோக்கம் இல்லை என ரவி கருணாநாயக்க அந்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற வரலாற்றில் இவ்வாறு சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில் சபையில் முறைப்பாடு செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாக இருக்க முடியும் எனவும் ஆவணத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்