ரயில் சாரதிகள் மீண்டும் பணிப்பகிஸ்கரிப்பில்

ரயில் சாரதிகள் மீண்டும் பணிப்பகிஸ்கரிப்பில்

ரயில் சாரதிகள் மீண்டும் பணிப்பகிஸ்கரிப்பில்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2018 | 8:56 am

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகள் சங்கத்தினர் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில் சாரதிகளை சேவையில் இணைத்துக் கொள்ளாமை, மேலதிக கொடுப்பனவை இரத்து செய்யதமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லையென ரயில்வே பொதுமுகாமையாளர் மகாநாம அபேவிக்ரமவிடம் நியூஸ்பெர்ஸ்டிற்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமது கோரிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிடின் தொடர் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கையினால் பல பகுதிகளுக்கான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அலுவலக ரயில் மற்றும் விரைவு ரயில் சேவைகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில், கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரை பயணத்தில் ஈடுபடும் ரயில்கள் என்பன சேவையில் ஈடுபடவில்லை என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்