முறிகள் மோசடி – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதத்திற்கான தினம் குறித்து தீர்மானம்

முறிகள் மோசடி – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதத்திற்கான தினம் குறித்து தீர்மானம்

முறிகள் மோசடி – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதத்திற்கான தினம் குறித்து தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2018 | 11:05 am

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி முறிகள் மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் இன்று இடம்பெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

விசாரணை அறிக்கை தொடர்பிலான விவாதம் தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி முறிகள் மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறிகள் விவகாரத்தில் தலையிட்டுள்ள விதம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் ,அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னிணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்றைய அமர்வின் போது குறிப்பிட்டிருந்தார்.

எனினும் மக்கள் விடுதலை முன்னணியினரால் தெரிவிக்கப்படும் தரவுகள் குறித்த அறிக்கையில் இல்லை என சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதன்போது குறிப்பிட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்