சட்டவிரேதமாக நுழையும் கப்பல்களுக்கு 175 மில்லியன் வரை தண்டம்  அறவிட நடவடிக்கை

சட்டவிரேதமாக நுழையும் கப்பல்களுக்கு 175 மில்லியன் வரை தண்டம்  அறவிட நடவடிக்கை

சட்டவிரேதமாக நுழையும் கப்பல்களுக்கு 175 மில்லியன் வரை தண்டம்  அறவிட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2018 | 11:22 am

1979 ஆம் ஆண்டு 59 ஆம் இலக்கத்தின் கீழான வெளிநாட்டு கடற்தொழில் படகுகள் முறைப்படுத்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான திருத்த சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடல் சார் நடவடிக்கையை தடுப்பதுடன் இலங்கை்கு உரித்தான கடற்பகுதியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.

புதிய திருத்தத்தின் கீழ் கைப்பற்றப்படும் கடற்தொழில் படகுகளுக்கான தண்டப்பணம் அதிகரிக்கப்படவுள்ளது.

இதுவரையில் நடைமுறையில் இருந்த 15 இலட்சம் ரூபா தண்டப்பணம் 175 மில்லின் ரூபா வரை அதிகரிக்கப்படுவதுடன் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் கடற்தொழில் படகு கைப்பற்றப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.

கைப்பற்றப்படும் வெளிநாட்டு படகுகள் தொடர்பில் குறித்த நாட்டின் கவுன்சிலருக்கு விரைவாக கடற்றொழில் திணைக்களத்தினால் அறிவிக்கப்படல் வேண்டும்.

சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும்போது கைப்பற்றப்படும் படகின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டும்.

புதிய திருத்தத்திற்கு அமைவாக கைப்பற்றப்படும் படகின் அளவுக்கேற்ப 5 மில்லியன் முதல் 175 மில்லியன் ரூபா வரையில் தண்டப்பணம் விதிக்கமுடியும்.

அத்துடன் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் படகுகளுக்கு அதன் நீளத்துக்கு அமைவாக அனுமதிப்பத்திர கட்டணமாக 750,000 ஆயிரம் ரூபாவில் இருந்து 150 மில்லியன் ரூபாய் வரை அறவிடப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்