கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடு – வீதிகள் சில மூடப்படும்

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடு – வீதிகள் சில மூடப்படும்

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடு – வீதிகள் சில மூடப்படும்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2018 | 9:13 am

இந்தோனேஷிய ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயம் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் நாட்டை விட்டு வெளியேறுகின்றமையை முன்னிட்டு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான மார்க்கத்தின் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதி இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மூடப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தோனேஷிய ஜனாதிபதி நாட்டிற்கு வருகை தருவதை முன்னிட்டு 11.30 மணியிலிருந்து ஒரு மணி வரை கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொட , தெமட்டகொட, பொரளை ,நெலும்பொக்குண சந்தி ,லிபர்டி சுற்றுவட்டம் மற்றும் காலி வீதியூடான வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பிரமதர் நாட்டை விட்டு வெளியேறுகின்றமையை முன்னிட்டு பிற்பகல் ஒரு மணி தொடக்கம் இரண்டு மணி வரை கொழும்பிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரையான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவத்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்