வித்தியாசமான வடிவங்களில் முகத்தை அழகாக்கிக் காட்டும் Beauty App வட கொரியாவில் அறிமுகம்

வித்தியாசமான வடிவங்களில் முகத்தை அழகாக்கிக் காட்டும் Beauty App வட கொரியாவில் அறிமுகம்

வித்தியாசமான வடிவங்களில் முகத்தை அழகாக்கிக் காட்டும் Beauty App வட கொரியாவில் அறிமுகம்

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2018 | 5:41 pm

வித்தியாசமான வடிவங்களில் முகத்தை அழகாக்கிக் காட்டும் ”Beauty App” எனப்படும் செயலி முதன்முறையாக வட கொரியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

முகத்தை அழகாக்கிக் காட்டும் கைபேசி செயலிகள் உலகம் முழுவதும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வட கொரியாவில் முதன்முறையாக போம்ஹயங்கி 1.0 என்ற Beauty App திறன்பேசி பயன்பாட்டாளர்களுக்காக வெளியிடப்படுகிறது.

பயன்பாட்டாளர்களுக்கு எந்த விதமான ஒப்பனை யுக்திகள் பொருத்தமாக இருக்கும் என்பதை வேறுபட்ட தெரிவுகளைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனை உருவாக்கிய கேயான்ஹங் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தங்களது செயலி “வட கொரிய பெண்களிடமிருந்து மிகவும் நல்லவிதமான கருத்துக்களைப் பெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

“நீங்கள் அழகாவதை நீங்களே பார்ப்பீர்கள்” என்று அந்த செயலியின் முன்னோட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்