பணி நிமித்தம் குவைத்திற்கு செல்ல பிலிப்பைன்ஸ் பிரஜைகளுக்குத் தற்காலிகத் தடை

பணி நிமித்தம் குவைத்திற்கு செல்ல பிலிப்பைன்ஸ் பிரஜைகளுக்குத் தற்காலிகத் தடை

பணி நிமித்தம் குவைத்திற்கு செல்ல பிலிப்பைன்ஸ் பிரஜைகளுக்குத் தற்காலிகத் தடை

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2018 | 3:44 pm

தொழில் நிமித்தம் குவைத் நாட்டிற்கு செல்ல வேண்டாம் என தமது பிரஜைகளுக்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குவைத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டுத் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த சுமார் 3 இலட்சம் தொழிலாளர்கள் குவைத்தில் பணிபுரிகின்றனர்.

இவர்களில் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதுடன், தற்கொலை செய்துகொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் அதிகமாகப் பதிவாவதால், பணி நிமித்தத் குவைத்திற்குச் செல்ல தமது பிரஜைகளுக்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தற்காலிகத் தடை விதித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்