நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்தைப் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்தைப் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2018 | 6:26 pm

இவ்வருடம் முதல் நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்தை தாம் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த மூன்று வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்கமைய பொருளாதார முகாமைத்துவத்திற்கு இடளித்திருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியிடம் நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் வழங்கப்பட்டிருந்த போதிலும் இந்த வருடம் முதல் தேசிய பொருளாதார சபையினூடாக பொருளாதார முகாமைத்துவத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய உற்பத்தி, முதலீடு ஆகியவற்றைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்