தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி தரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டாம்: சூர்யா வேண்டுகோள்

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி தரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டாம்: சூர்யா வேண்டுகோள்

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி தரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டாம்: சூர்யா வேண்டுகோள்

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2018 | 5:23 pm

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக்கொள்ள வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இருவர் சினிமா செய்தியைப் பற்றி பேசிக்கொள்ளும்போது, நடிகர் சூர்யாவின் உயரத்தைக் குறிப்பிட்டு கிண்டல் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனையடுத்து, நடிகர் சூர்யாவின் ரசிகர்களும் திரையுலகினரும் தமது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இருவரும், தொலைக்காட்சி நிர்வாகமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வற்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற” என்று பதிவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்