ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கொடிகாமத்தில் கைது

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கொடிகாமத்தில் கைது

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கொடிகாமத்தில் கைது

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2018 | 3:33 pm

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் யாழ். கொடிகாமத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பிரதேச சபையின் அல்லாரை கிராம வேட்பாளரே நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசாரணைகளுக்காக ஆஜராகத் தவறியதால் சாவகச்சேரி நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வேட்பாளர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்