முறிகள் மோசடி: விசாரணை அறிக்கையில் பல பக்கங்கள் இல்லை – கீர்த்தி தென்னக்கோன்

முறிகள் மோசடி: விசாரணை அறிக்கையில் பல பக்கங்கள் இல்லை – கீர்த்தி தென்னக்கோன்

முறிகள் மோசடி: விசாரணை அறிக்கையில் பல பக்கங்கள் இல்லை – கீர்த்தி தென்னக்கோன்

எழுத்தாளர் Bella Dalima

19 Jan, 2018 | 4:59 pm

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறிகள் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் பல பக்கங்கள் இல்லை என CaFFE அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

[quote]முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஒரு பகுதி மாத்திரமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை தௌிவாகின்றது. சில பகுதிகளை பகிரங்கப்படுத்த வேண்டாம் என ஆணைக்குழுவினால் சிபாரிசு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தவிர, மேலும் பல பக்கங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது தௌிவாகின்றது. நூற்றுக்கணக்கான பக்கங்கள் அல்ல. ஆயிரக்கணக்கான பக்கங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்களை பகிரங்கப்படுத்தாமல் இந்த முறிகள் மோசடியுடன் தொடர்புபட்ட உண்மையான நபர்களை மக்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அத்துடன், 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இது தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த ஆணைக்குழுவின் பாகங்களை மறைப்பதற்கு யாராவது முயற்சி செய்தால் இதன் மூலம் திருடர்களைப் பாதுகாப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என்பது தௌிவாகின்றது.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்