மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவிற்கு பிடியாணை

மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவிற்கு பிடியாணை

மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவிற்கு பிடியாணை

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2018 | 4:16 pm

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிகா விமலசிறி பிடியாணை பிறப்பித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி பகுதியில் இரவு நேர களியாட்ட விடுதியில் பிரித்தானிய பிரஜையொருவரையும் அவரது காதலியையும் தாக்கி காயமேற்படுத்தியமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்று இடம்பெற்ற இந்த வழக்கின் விசாரணைகளுக்கு ஆஜராகாத நிலையில், மாலக்க சில்வாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்