மின்சாரசபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு

மின்சாரசபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு

மின்சாரசபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2018 | 9:17 am

மின்சார சபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 9 மணிமுதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, நாடுதழுவிய ரீதியில் உடனடி பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் நியூஸ் பெஸ்டுக்குத் தெரிவித்தார்.

நேற்று மாலை ஊழியர்கள் சிலர் மின்சார சபையின் தலைவரைத் தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து மின்சார சபைத் தலைவரை மீட்டுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சட்டவிரோத சம்பள உயர்விற்கு எதிராக மின்சார சபை ஊழியர்களால் நேற்று முற்பகல் முதல் போராட்டம் முன்னெக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்