மாத்தறையில் 70 வயதான தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மகன் கைது

மாத்தறையில் 70 வயதான தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மகன் கைது

மாத்தறையில் 70 வயதான தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மகன் கைது

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2018 | 4:04 pm

தனது தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவர் மாத்தறை – வெலிகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 70 வயதான பெண் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிகம – முகுதுகமுவ, விஜேரத்ஹேன பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது சகோதரியின் மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 13 வருடங்கள் சிறைச்சாலையிலிருந்த சந்தேகநபர் கடந்த மாதமே விடுதலையாகியிருந்தார்.

கொழும்பிலிருந்து கடந்த வாரம் தனது வீட்டிற்குத் திரும்பிய குறித்த சந்தேகநபர் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 70 வயதான தனது தாயை குறித்த சந்தேகநபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதுடன், சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இது தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறியப்படுத்தியுள்ளனர்.

சந்தேகநபரை மாத்தறை – வெலிகம பொலிஸார் கைது செய்து மாத்தறை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்