கஜகஸ்தானில் பஸ் தீப்பிடித்தது: உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 52 பேர் உயிரிழப்பு

கஜகஸ்தானில் பஸ் தீப்பிடித்தது: உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 52 பேர் உயிரிழப்பு

கஜகஸ்தானில் பஸ் தீப்பிடித்தது: உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 52 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2018 | 4:56 pm

கஜகஸ்தானின் வட மேற்குப் பகுதியில் இன்று காலை பஸ் ஒன்றில் தீப்பிடித்ததில் 52 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

கஜகஸ்தானின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சமரா – சைம்கேன்ட் சாலை பகுதியில் இன்று காலை 10.30 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கஜகஸ்தானுடன் ரஷ்யாவை இணைக்கும் இந்த சாலையின் வழியாகத்தான் ரஷ்யாவில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்காக கஜகஸ்தான் தொழிலாளர்களை அழைத்துச்செல்வது வழக்கம்.

சம்பவத்தின் போது குறிப்பிட்ட பஸ்ஸில் இரண்டு ஓட்டுநர்கள் உட்பட 57 பேர் பயணம் செய்ததாக கஜகஸ்தான் நாட்டு அவசர சேவைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தீ விபத்தின் பொழுது பஸ்ஸில் இருந்த 5 பேர் மட்டும் தப்பித்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில், தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பயணிகள் அனைவரும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்