ஐ.தே.க-வின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.H.M. சல்மான் இராஜினாமா

ஐ.தே.க-வின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.H.M. சல்மான் இராஜினாமா

ஐ.தே.க-வின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.H.M. சல்மான் இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2018 | 5:21 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.H.M. சல்மான் தனது இராஜினாமாக் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.

M.H.M. சல்மானின் இராஜினாமாக் கடிதத்தை எதிர்வரும் தினங்களில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலின் மூலம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக M.H.M. சல்மான் பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்தார்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு வேட்பாளர்கள் வெற்றியீட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டமையினால், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்டன.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு தேசியப்பட்டியல் ஆசனமொன்று கிடைத்தது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனம், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அலி ஸாஹிர் மௌலானாவுக்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியால் வழங்கப்பட்ட இரண்டு ஆசனங்களும் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய A.R.A. ஹாபீஸ் மற்றும் M.H.M. சல்மான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு A.R.A. ஹாபீஸ் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்ததை அடுத்து, அந்த வெற்றிடத்திற்கு M.S. தௌபீக் நியமிக்கப்பட்டார்.

இது குறித்து நாம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரிடம் வினவியபோது, தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

கட்சியின் தலைவர் அதனை விரைவில் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, தேசியப்பட்டியலுக்கு உறுப்பினரைத் தெரிவு செய்யும் அதிகாரத்தினை கட்சியின் உயர் பீடம் தலைவருக்கு வழங்கியுள்ளதாகவும் அதன்படி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதனை அறிவிப்பார் என்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் அப்துல் மஜீத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்