இலங்கை மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது 

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது 

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது 

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2018 | 5:09 pm

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

நேற்று (17) இரவு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து நாடுதழுவிய ரீதியில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர்.

நேற்று மாலை ஊழியர்கள் சிலர் மின்சார சபையின் தலைவரைத் தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மின்சார சபைத் தலைவரை மீட்டனர்.

சட்டவிரோத சம்பள உயர்விற்கு எதிராக மின்சார சபை ஊழியர்களால் நேற்று முற்பகல் முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்