இலங்கை போக்குவரத்து சபையில் பாரிய பஸ் பற்றாக்குறை

இலங்கை போக்குவரத்து சபையில் பாரிய பஸ் பற்றாக்குறை

இலங்கை போக்குவரத்து சபையில் பாரிய பஸ் பற்றாக்குறை

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2018 | 10:16 am

இலங்கை போக்குவரத்து சபையில் 1,350 பஸ்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது போக்குவரத்து சபை வசம் 7,329 பஸ்களே உள்ளதாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஆர்.டி.பண்டார குறிப்பிட்டார்.

அவற்றில் 6,400 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ளதாக நிறைவேற்று பணிப்பாளர் ஆர்.டி.பண்டார மேலும் தெரிவித்தார்.

நாள் தோறும் ஏற்படுகின்ற இயந்திர கோளாறுகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளாதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களே பஸ் பற்றாக்குறை காரணமாக பெரிதும் பாதிக்கபாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை 1,500 ற்கும் அதிகமான பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் பற்றாக்குறை நிலவுவதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்