அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து அரசியல் பயணம் ஆரம்பமாகும்: கமல் தெரிவிப்பு

அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து அரசியல் பயணம் ஆரம்பமாகும்: கமல் தெரிவிப்பு

அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து அரசியல் பயணம் ஆரம்பமாகும்: கமல் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2018 | 3:33 pm

ராமேஸ்வரத்திலுள்ள டொக்டர் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தென்னிந்திய திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்திய குடியரசின் முன்னாள் தலைவரான டொக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமிற்கு பல கனவுகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், அது போன்ற கனவுகள் கொண்டவர்களில் தானும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதே தனது முழு நேர கடமையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அரசியலில் கமலுடன் இணைந்து செயற்படுவது குறித்து காலமே பதில் சொல்லும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கருத்தை தான் வழிமொழிவதாக நடிகர் கமல்ஹாசன் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்