ஓட்டமாவடியில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களிடையே மோதல்: நால்வர் காயம்

ஓட்டமாவடியில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களிடையே மோதல்: நால்வர் காயம்

ஓட்டமாவடியில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களிடையே மோதல்: நால்வர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2018 | 9:01 pm

மட்டக்களப்பு – ஓட்டமாவடி, செம்மண் ஓடை பகுதியில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரும் அடங்குவதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக வாழைச்சேனை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் மற்றுமொருவருக்கு கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஏனைய இருவருக்கும் கைகளில் உராய்வுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இரண்டு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களே தம்மை முதலில் தாக்கியதாக முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் என கூறப்படுவோர் தெரிவித்தனர்.

வடிகான் சுத்தப்படுத்தல் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பு வரை நீடித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இதுவரை முறைப்பாடுகள் எவையும் பதிவாகவில்லை என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்