928 கிலோகிராம் கொக்கேய்ன் இன்று அழிப்பு

928 கிலோகிராம் கொக்கேய்ன் இன்று அழிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2018 | 10:21 am

பொலிஸ் போதைப் பொருள் பிரிவினரால் கைப்பற்றப்ப்டடுள்ள 928 கிலோகிராம் கொக்கேய்ன் இன்று அழிக்கப்படுகின்றது.

கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சபை வளாகத்தில் கொக்கேய்ன் தொகையை நீரில் கரைத்து முற்றாக அழிக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்து்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அப்பகுதிக்கு வருகை தந்துள்ளார்.

குறித்த கொக்கேய்ன் தொகை 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி கொழும்பிற்கு வருகை தந்த கப்பலொன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கப்பலானது ஈக்குவடோரிலிருந்து பெல்ஜியம் ஊடாக இந்தியா முன்ட்ரா துறைமுகத்தை சென்றடையவிருந்தது.

பொலிஸ் போதைப் பொருள் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கொக்கேய்னின் பெறுமதி ஆயிரத்து 620 கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்