பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் காலமானார்

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் காலமானார்

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2018 | 5:50 pm

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் (63) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

இவர் தமிழகத்தின் செங்கல்பட்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வே. சங்கரன். ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன் ஆவார்.

சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞானிக்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஞானி.

ஞானியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்