ஶ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் தடைப்பட்டிருந்த சத்திரசிகிச்சைகள்   மீண்டும் ஆரம்பம்

ஶ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் தடைப்பட்டிருந்த சத்திரசிகிச்சைகள்  மீண்டும் ஆரம்பம்

ஶ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் தடைப்பட்டிருந்த சத்திரசிகிச்சைகள்  மீண்டும் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2018 | 3:12 pm

தாதியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட சத்திரசிகிச்சை நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பினால் நிறுத்தப்பட்ட 700 க்கும் அதிக சத்திரசிகிச்சைகளை இந்த மாதத்திற்குள் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சுசித் சேனாரத்ன குறிப்பிட்டார்.

கடமை நேர வரவைப் பதிவு செய்ய கைரேகை இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஶ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையின் தாதிகள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த இயந்திரத்தை அகற்றுவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்ததை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்