குளியாப்பிட்டியிலும் அக்கரைப்பற்றிலும் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி

குளியாப்பிட்டியிலும் அக்கரைப்பற்றிலும் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி

குளியாப்பிட்டியிலும் அக்கரைப்பற்றிலும் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2018 | 3:35 pm

குளியாப்பிட்டி- எபலதெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

எபலதெனியவிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிளொன்று எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

இதேவேளை, அக்கரைப்பற்று – பனங்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 26 வயதான இளைஞர் ஒருவரெ உயிரிழந்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்