கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் அபுதாபியில் சிறை வைக்கப்பட்டுள்ளாரா?

கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் அபுதாபியில் சிறை வைக்கப்பட்டுள்ளாரா?

கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் அபுதாபியில் சிறை வைக்கப்பட்டுள்ளாரா?

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2018 | 5:40 pm

கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தாம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தம் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு கத்தார் மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதனை சுமூகமாக்க பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் முக்கியமானவர் கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா பின் அலி அல் – தனி.
அவர்தான் இப்போது தாம் சிறை வைக்கப்பட்டிருப்பதாக யூ-டியூப் வழியாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த யூ-டியூப் வீடியோ பதிவில் அவர் தம்மை அபுதாபி இளவரசர் தான் தடுத்து வைத்திருப்பதாகவும் தமக்கு ஏதேனும் நடந்தால் அவர் தான் முழுப் பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், விருந்தாளியாக அழைத்து, வௌியில் செல்ல விடாமல் தன்னை அபுதாபி இளவரசர் ஷேக் முகமது தடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

ட்விட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அபுதாபி கல்வித்துறை தலைவர் ஷேக் அலி ரஷீத் அல் நுவைமி, ”ஷேக் அப்துல்லா சுதந்திரமாகதான் உள்ளார். அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்,” என்று கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்