அவசியம் கருதியே சர்ச்சைக்குரிய வசனங்களைப் பேசினேன்: விஜய்

அவசியம் கருதியே சர்ச்சைக்குரிய வசனங்களைப் பேசினேன்: விஜய்

அவசியம் கருதியே சர்ச்சைக்குரிய வசனங்களைப் பேசினேன்: விஜய்

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2018 | 6:03 pm

மெர்சல் படத்தில் அவசியம் கருதியே சர்ச்சைக்குரிய வசனங்களைப் பேசியதாக நடிகர் விஜய் கூறியுள்ளார்.

விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மெர்சல் படம் வெளியானபோது அதில் இடம்பெற்றிருந்த டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி வரி தொடர்பான வசனங்கள் குறித்து பெரும் சர்ச்சை உருவானது.

இப்படத்தின் வசனங்களுக்கு பாஜக-வினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும் பல்வேறு கட்சியினர் ‘மெர்சல்’ படக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜனவரி 13 ஆம் தேதி விகடன் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ‘மெர்சல்’ படத்திற்காக சிறந்த நடிகர் விருதை விஜய்க்கு கமல்ஹாசன் வழங்கி வைத்தார்.

இதன்போது உரையாற்றிய விஜய், அவசியம் கருதியே படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களைப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்