English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
14 Jan, 2018 | 3:44 pm
இறக்குவானை – கொஹொம்பகந்த, லபுவெல்வத்த வீதியில் நேற்றிரவு (13) நடத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிப்பிரயோகத்தில் குறித்த நபரின் தலையில் காயமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபரை கஹவத்த வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கஹவத்தையைச் சேர்ந்த 69 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளொன்றும், துப்பாக்கி ரவையொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் மாணிக்கக்கல் வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, கம்பஹா படபொத்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
11 May, 2022 | 08:08 PM
23 Apr, 2022 | 04:04 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS