தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 418 முறைபாடுகள்

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 418 முறைபாடுகள்

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 418 முறைபாடுகள்

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2018 | 4:46 pm

தேர்தல் சட்டங்களை மீறிய 97 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் அதிக முறைபாடுகள் பொலிஸ் தலைமையகத்தின் தேர்தல் நடவடிக்கை பிரிவிற்கு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை 418 முறைபாடுகள் கிடைத்துள்ளன.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 11 முறைபாடுகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் சட்டத்தை மீறயமை தொடர்பிலேயே அதிக முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 397 முறைபாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயெ அதிக முறைபாடுகள் பதிவாகியுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்