திவுலப்பிட்டியவில் வீசிய கடும் காற்றினால் 659 வீடுகளுக்கு சேதம்

திவுலப்பிட்டியவில் வீசிய கடும் காற்றினால் 659 வீடுகளுக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2018 | 4:22 pm

திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் 659 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட இடர்முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் அஜித் நிசாந்த தெரிவித்தார்.

திவுலப்பிட்டிய பகுதியை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் 17 கிராம சேவையாளர் பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொட்டதெனியாவ – கிருலகெதர பகுதியில் 20 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

வீசிய கடும் காற்றினால் சுமார் 500 வீடுகளுக்கான மின்சாரம் தூண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சாரத்தினை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்த்தன தெரிவித்தார்.

இதேவேளை,கம்பஹா அகரவிட்ட பகுதியில் மின்னல்தாக்கியதில் வீடொன்றுக்கு பாரிய தேசம் ஏற்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்