ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2018 | 8:10 pm

மூதூர் மீணாக்கேணி பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியால் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மூதூர் மீணாக்கேணி பகுதியில் கடந்த ஆறாம் திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இடையூறு விளைவித்ததாக தெரிவித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தங்கராசா புஸ்பராசாவினால், கந்தையா பன்பரசனுக்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டுக்கு அமைய இருதரப்பினரும் சம்பூர் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.

இரு தரப்பினரையும் சமரசப்படுத்தியதுடன், இதன் பின்னர் ஏதேனும் சம்பவங்கள் இடம் பெறும் பட்சத்தில் கடிதம் மூலம் தெரியப்படுத்துமாறும் சம்பூர் பொலிஸார் கூறியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு அச்சுறுத்தல் விடுத்தாக கந்தையா பன்பரசன் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கடந்த புதன் கிழமை முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்