மக்கள் சக்தி கிராமங்கள்தோறும், குளங்கள்தோறும்: மியதென குளம் தொடர்பில் ஆய்வு

மக்கள் சக்தி கிராமங்கள்தோறும், குளங்கள்தோறும்: மியதென குளம் தொடர்பில் ஆய்வு

மக்கள் சக்தி கிராமங்கள்தோறும், குளங்கள்தோறும்: மியதென குளம் தொடர்பில் ஆய்வு

எழுத்தாளர் Bella Dalima

11 Jan, 2018 | 8:07 pm

இலங்கையின் நீர்ப்பாசனக் கட்டமைப்பு தொடர்பில் ஆராயும் ”மக்கள் சக்தி கிராமங்கள்தோறும், குளங்கள்தோறும்” திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஆறாம் நாள் இன்றாகும்.

பெல்லன்கடவெல – மியதென குளம் தொடர்பில் இன்று திட்டக்குழுவினர் கவனம் செலுத்தினர்.

கடந்த காலங்களில் மழை வீழ்ச்சி கிடைக்காவிட்டாலும் பெல்லங்கடவெல வாவி கட்டமைப்பில் தொடர்ந்தும் போதிய நீர் காணப்படுகின்றது.

எனினும், நீர் முகாமைத்துவத்தில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக குளத்தின் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குளத்தில் நீர் கசிவு ஏற்படுகின்றமை இங்குள்ள பாரிய பிரச்சினையாகும்.

குளத்தின் புனரமைப்புப் பணிகள் சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குளங்களை நம்பி வாழும் விவசாயிகளின் பிரச்சினைகளும் இதன்போது ஆய்விற்குட்படுத்தப்பட்டது.

திப்பலவ குளத்தில் ஏற்படும் நீர் கசிவினால் வௌியேறும் நீரை கொஸ்கொல்ல குளத்தில் சேமிப்பதற்கான திடடம் வகுக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்தக் குளமும் தூர்ந்துபோயுள்ளமையைக் காண முடிகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்