பெண்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

பெண்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

பெண்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2018 | 7:38 am

பெண்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது.

இதற்கான விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதை தடை செய்யும் வகையில் 1979 ஆம் ஆண்டு வௌியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டு புதிய வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கையொப்பமிட்டுள்ளார்.

மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் பெண்கள் மதுபானங்களை கொள்வனவு செய்வதற்கும், மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பணியாற்றுவதற்கும் இன்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்