பாகிஸ்தானில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை

பாகிஸ்தானில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை

பாகிஸ்தானில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை

எழுத்தாளர் Bella Dalima

11 Jan, 2018 | 4:38 pm

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த வாரம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருந்தார்.

வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டது CCTV கெமராவில் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், சிறுமியின் உடல் நேற்றிரவு சாதார் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில், சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சிறுமியைக் கொன்றவர்களைக் கைது செய்ய வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலைக் கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் ஷாபாஸ் ஷரிப் தெரிவித்துள்ளார்.

 

201801101725451561_1_pakks._L_styvpf


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்