தேசிய மற்றும் கண் வைத்தியசாலைகளின் தாதியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு

தேசிய மற்றும் கண் வைத்தியசாலைகளின் தாதியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு

தேசிய மற்றும் கண் வைத்தியசாலைகளின் தாதியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2018 | 6:53 am

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தாதியர் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்து தேசிய வைத்தியசாலை மற்றும் கண் வைத்தியசாலைகளின் தாதியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

அரச இணைந்த தாதியர் தொழிற்சங்கம் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை உறுதி செய்தது.

கடமை நேர வரவை பதிவு செய்ய கைரேகை இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தாதியர்கள் கடந்த 3 ஆம் திகதியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சுனித் சேனாரத்ன தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்