சிலந்தியைக் கொல்ல முயன்று வீட்டைக் கொளுத்தியவர்: கலிஃபோர்னியாவில் சம்பவம்

சிலந்தியைக் கொல்ல முயன்று வீட்டைக் கொளுத்தியவர்: கலிஃபோர்னியாவில் சம்பவம்

சிலந்தியைக் கொல்ல முயன்று வீட்டைக் கொளுத்தியவர்: கலிஃபோர்னியாவில் சம்பவம்

எழுத்தாளர் Bella Dalima

10 Jan, 2018 | 4:47 pm

வீட்டினுள் நுழைந்த சிலந்தியைக் கொல்ல முயன்றவர் தான் தங்கியிருந்த குடியிருப்பிற்கே தீ வைத்த சம்பவம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

கலிஃபோர்னியாவில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு (apartment) ஒன்றில் நுழைந்த சிலந்தியைக் கொல்ல, அங்கிருந்த இளைஞர் ஒருவர் முயன்றுள்ளார்.

அவர் சிலந்திக்கு லைட்டரைக்கொண்டு தீ மூட்டியுள்ளார்.

தீப்பற்றிய சிலந்தி அவரின் படுக்கையில் தீ பரவக் காரணமாக அமைந்துவிட்டது.

இதனால் வீட்டினுள் பரவிய தீ வேகமாக குடியிருப்பு முழுதும் பரவியது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 20 நிமிடங்கள் முயன்று தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும் தீயினால் 11,000 டொலர்கள் அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்