வாகனங்களை ஏற்றிச்சென்ற கப்பலுடன் மீனவப் படகு மோதியதில் இருவர் உயிரிழப்பு

வாகனங்களை ஏற்றிச்சென்ற கப்பலுடன் மீனவப் படகு மோதியதில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2018 | 9:05 am

தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் வாகனங்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று மீனவப்படகொன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமற்போயுள்ளனர்.

மீனவப்படகில் இருந்த மேலும் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

காணாமற்போன மீனவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

இதற்காக இரண்டு டோரா படகுகள் பயன்டுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கமான்டர் தினேஷ் பண்டார தெரிவித்தார்.

தெய்வேந்திர முனை கடற்பரப்பில் இருந்து 13 கடல்மைல் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனங்களை ஏற்றிவந்த குறித்த கப்பல் சென்னையில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதுடன், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணித்த நிலையில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்