முறிகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

முறிகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

முறிகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2018 | 6:59 am

முறிகள் கொடுக்கல் வாங்கல் விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் விசேட அமர்வின் போது குறித்த அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, முறிகள் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பிக்காமல் இன்றைய தினம் பாராளுமன்றத்தை கூட்டுவதில் பயனில்லை என அரசியல் கட்சித்தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனால் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை பிறிதொரு தினத்தில் நடத்துவதற்கு கட்சித்தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் நேற்று மாலை நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

முறிகள் விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் பாராளுமன்றத்தினை கூட்டுமாறு பிரதமர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்