கிளிநொச்சி வைத்தியசாலை அருகில் கைவிடப்பட்ட சிசு ஆபத்தான நிலையில்

கிளிநொச்சி வைத்தியசாலை அருகில் கைவிடப்பட்ட சிசு ஆபத்தான நிலையில்

கிளிநொச்சி வைத்தியசாலை அருகில் கைவிடப்பட்ட சிசு ஆபத்தான நிலையில்

எழுத்தாளர் Bella Dalima

10 Jan, 2018 | 6:36 pm

கிளிநொச்சி வைத்தியசாலை அருகில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிசு பொலிஸாரால் மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிறந்து சில நாட்களே ஆன நிலையில் இந்த சிசு கைவிடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சேவைகள் சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் குமரவேல் தெரிவித்தார்.

குழந்தை தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அதிகமான கிருமித்தொற்றுக்கு உட்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பிராந்திய சேவைகள் சுகாதாரப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

சிசுவைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தையின் பெற்றோரைத் தேடும் நடவடிக்கையை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்