பளையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயம்

பளையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயம்

பளையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2018 | 10:32 am

கிளிநொச்சி பளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்றிரவு 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பளையைச் சேர்ந்த 38 வயதான ஒருவர் காயமடைந்ததுடன், அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்ட அதேவேளை, குறித்த நபரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்