தாதியர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக  ஜயவர்தனபுர வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிப்பு

தாதியர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக  ஜயவர்தனபுர வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிப்பு

தாதியர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக  ஜயவர்தனபுர வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2018 | 9:00 am

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தாதியர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைகளின் நிலைமை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சுசித் செனாரத்ன தெரிவித்துள்ளார்.

தாதியர்கள் அவசர சேவைகள் பிரிவிலிருந்து விலகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடமை நேர வரவை பதிவு செய்ய கைரேகை இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தாதியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

நிர்வாக நடவடிக்கைகளை இலகுவதற்காகவே இந்த இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சுசித் செனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது,

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்