நாட்டில் மாந்திரீக நடவடிக்கையில் ஈடுப்பட்ட 27 இந்தியர்களை நாடு கடத்த தீர்மானம்

நாட்டில் மாந்திரீக நடவடிக்கையில் ஈடுப்பட்ட 27 இந்தியர்களை நாடு கடத்த தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2018 | 8:20 pm

நாட்டில் மாந்திரீக நடவடிக்கையில் ஈடுப்பட்ட 27 இந்தியர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசா விதிமுறைகளை மீறி நாட்டில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணை கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் கடந்த 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மாந்திரீக நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட 27 பேரும் கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 23 ஆண்களும் 5 பெண்களும் அடங்குகின்றனர்.

200 ரூபா முதல் 20,000 ரூபா வரை பணம் அறவிட்டு மாந்திரீக நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்